Nagorno Karabakh பகுதியில் அசெர்பைஜான் தாக்குதல் Nagorno Karabakh பகுதியில் அசெர்பைஜான் தாக்குதல் 

Nagorno Karabakh பகுதியில் அமைதிக்கு திருத்தந்தை அழைப்பு

ஆயுதங்கள் மௌனப்படுத்தப்பட வேண்டும். மனித மாண்பிற்கான மதிப்பு, மற்றும் மனிதர்களுக்கான நன்மைத்தனத்தை உள்ளடக்கிய அமைதித் தீர்வுகள் காணப்பட.....

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மனிதகுல நெருக்கடிகளைச் சந்தித்துவரும் தென் Caucasus பகுதியில் ஆயுத மோதல்கள் இடம்பெற்றுவருவது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தென் Caucasus பகுதியில் இருக்கும் Nagorno Karabakh என்னுமிடத்தில் மக்கள் சமூக நெருக்கடிகளை சந்தித்துவந்த வேளையில் தற்போது ஆயுத மோதல்களும் இணந்து மக்களின் வாழ்வை துயரத்துக்குள்ளாக்கியுள்ளது குறித்து தன் கவலையை, புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியான தீர்வு காண்பதற்கு அனைத்துலக சமுதாயத்தின் உதவியையும் நாடியுள்ளார்.

ஆயுதங்கள் மௌனப்படுத்தப்பட வேண்டும் எனவும், மனித மாண்பிற்கான மதிப்பு, மற்றும் மனிதர்களுக்கான நன்மைத்தனத்தை நோக்கமாகக் கொண்ட அமைதித் தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும், உலக சமுதாயத்தை நோக்கியும், Nagorno Karabakhல் போரிடும் துருப்புக்களை நோக்கியும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

அசெர்பைஜானுக்கும் அர்மீனியாவுக்கும் இடையே பெரும் மோதலுக்கு காரணமாக இருக்கும் Nagorno-Karabakh பகுதியில் சிறுபான்மையினராக இருக்கும் அர்மீனியர்கள் மீது இராணுவத் தாக்குதலை மீண்டும் துவக்கியுள்ளது அசெர்பைஜான் நாடு.

Nagorno-Karabakh மலைப்பகுதியில் இடம்பெறும் மோதல்களால் இதுவரை இரண்டு பொதுநிலையினர் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2023, 14:41