தேடுதல்

தூரினின் torre pellice  கூட்டம் நடைபெறும் இடம் தூரினின் torre pellice கூட்டம் நடைபெறும் இடம் 

மெத்தடிஸ்ட் மற்றும் வால்டேசியன் ஒருங்கிணைந்த பயணக்கூட்டம்

இத்தாலி முழுவதிலுமிருந்து 180 பிரதிநிதிகளுடன் ஆரம்பமான கிறிஸ்தவ ஒருங்கிணைந்த பயணக்கூட்டமானது தூரினின் Torre Pellice என்னுமிடத்தில் நடைபெற்று வருகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

​கிறிஸ்து நம்மை வரவேற்கின்றார், அவரோடும் உடன் சகோதரர்களோடும் நிறைவை நோக்கி நம்மை வழிநடத்துகின்றார் என்ற ஆழமான கிறிஸ்து அனுபவம் பெற உதவும் நிகழ்வாகவும், ஒற்றுமைக்கான சந்தர்ப்பமாகவும் ஒருங்கிணைந்த பயணக்கூட்டம் அமையட்டும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக்கிழமை முதல் 25 வெள்ளிக்கிழமை வரை இத்தாலியின் தூரின் பகுதியில் நடைபெற்று வரும் மெத்தடிஸ்ட் மற்றும் வால்டேசியன் தலத்திருஅவைகளின் சினோடல் என்னும் ஒருங்கிணைந்த பயணத்தில் பங்கேற்பவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தலத்திருஅவைகளுக்கிடையில் இணக்கம், கிறிஸ்தவ ஒன்றிப்புடன் கூடிய உரையாடல், இயேசுவின் நற்செய்திக்கு ஒன்றிணைந்து சான்று பகர்வதற்கான ஆற்றல் ஆகியவற்றைக் கொடையாக அளித்தருள விண்ணகத்தந்தையிடம் தனது செபங்களை எடுத்துரைத்துள்ளதாகவும் அத்தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களின் கையொப்பமிட்டு அனுப்பப்பட்டுள்ள தந்திச் செய்தியானது தூரினின் Pinerolo மறைமாவட்ட ஆயர் Derio Olivero அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

‘‘சமூகத்தில் தலத்திருஅவையின் அர்ப்பணிப்பு, நம்பிக்கை, நெறிமுறைகள்‘‘ என்றக் கருப்பொருளில் 2023ஆம் ஆண்டிற்கான இந்த ஒருங்கிணைந்த பயணக்கூட்டமானது இத்தாலி முழுவதிலுமிருந்து 180 பிரதிநிதிகளுடன் தூரினின் Torre Pellice என்னுமிடத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2023, 13:41