உலக மனிதாபிமான தினத்திற்குத் திருத்தந்தையின் செய்தி
மெரினா ராஜ் – வத்திக்கான்
மனித இதயங்களில் இருந்து வெறுப்பு மற்றும் வன்முறையை ஒழிக்க உதவ வேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஆகஸ்ட் 19 சனிக்கிழமை உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு இவ்வாறு தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயுதங்கள் பயன்படுத்துவதை தடுத்து அதனை ஒதுக்கி வைப்பதை ஊக்குவிப்போம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வெறுப்பு மற்றும் வன்முறையை மனித இதயங்களில் இருந்து ஒழிக்க உதவுவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு. ஆயுத ஒழிப்பை ஊக்குவிப்பதன் வழியாக இராணுவ செலவினங்களைக் குறைத்து, அதிகமான மனிதாபிமான தேவைகள் வழங்கப்படுவதற்கும், மரணத்தின் கருவிகளை வாழ்க்கையின் கருவிகளாக மாற்றுவதற்கும் நாம் உதவலாம் என்று அக்குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்