இளையோரே கனவு காணும் துணிவை இழக்காதீர்
மெரினா ராஜ் – வத்திக்கான்
பெரிய கனவினைக் காண்பதற்கும், வாழ்க்கையை நிறைவாக வாழ்வதற்குமான துணிவினை இளையோர் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது என்றும், பாதுகாப்புக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு அதை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் டுவிட்டர் குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 12 சனிக்கிழமை ஹேஸ்டாக் இளையோர் தினம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டக் குறுஞ்செய்தியில் இவ்வாறு தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் அனைவரும் உடன்பிறந்த உறவின் வெற்றியாளர்களாக மாறவேண்டும் என்றும் அழைப்புவிடுத்துள்ளார்.
அன்பான இளையோரே, பெரிய கனவு காண்பதற்கும், வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்குமான துணிவை ஒருபோதும் இழக்காதீர்கள்! பாதுகாப்புக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு அதை உலகம் முழுதும் பரப்புங்கள். உடன்பிறந்த உறவின் வெற்றியாளர்களாக மாறுங்கள், கடவுள் மற்றும் நல்ல ஆலோசகர்களால் வழிநடத்தப்படுவதன் வழியாக வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளுங்கள் என்பதே அக்குறுஞ்செய்தியில் திருத்தந்தை வலியுறுத்துவதாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்