தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

திருத்தந்தை : இறைவனை சந்திப்பதன் அடையாளம் மகிழ்ச்சி

இறைவனிடம் இருந்து விலகி இருப்பவர்கள், தங்களிடம் ஏராளமான உடைமைகள் மற்றும் வாய்ப்புகள் இருந்தாலும், அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை

மெரினா ராஜ் - வத்திக்கான்

இறைவனை சந்திப்பதன் அடையாளம் மகிழ்ச்சி என்றும், சோகம் மற்றும் பயம், கடவுளிடமிருந்து நம்மை தொலைவில் வைக்கும் அடையாளங்கள் என்றும் தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 28, திங்கள் கிழமை  மறைவல்லுனரான தூய அகுஸ்தினாரின் திருவிழாவை திருஅவை சிறப்பித்து மகிழும் வேளையில் இவ்வாறு தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மகிழ்ச்சியுடன் வாழ வலியுறுத்தியுள்ளார்.

இறைவனிடம் இருந்து விலகி இருப்பவர்கள், தங்களிடம் ஏராளமான உடைமைகள் மற்றும் வாய்ப்புகள் இருந்தாலும், அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்றும் எடுத்துரைத்துள்ளார்.

உண்மையான மகிழ்ச்சியின் அடையாளம் இறைவனை சந்திப்பது. இதற்கு எதிர்புறம் உள்ள சோகம் மற்றும் பயம் இறைவனை விட்டு நாம் தொலைவில் இருப்பதற்கான அடையாளங்கள். இறைவனிடம் இருந்து விலகி இருப்பவர்கள், தங்களிடம் ஏராளமான உடைமைகள் மற்றும் வாய்ப்புகள் இருந்தாலும், அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை, என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி வலியுறுத்துவதாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2023, 15:12