பகைவரையும் அன்பு செய்து வாழ்தல் - திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
உண்மையான சவால் என்பது ஒரே தந்தையின் பிள்ளைகளாக இருந்து மனித உடன்பிறந்த உணர்வுடன் ஒவ்வொருவரையும் குறிப்பாக பகைவரையும் அன்பு செய்து வாழும் உலகை உருவாக்குவது என்று தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 18 வெள்ளிக்கிழமை வெளியிட்ட குறுஞ்செய்தியில் இவ்வாறு தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பகைவர்கள் இல்லா உலகை உருவாக்குதலே உண்மையான சவால் என்று அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
ஒரே வானகத்தந்தையின் பிள்ளைகளாக இருப்பதற்கும், மனித உடன்பிறந்த உணர்வுடன் கூடிய உலகத்தை உருவாக்குவதற்கும், அனைவரையும் குறிப்பாகப் பகைவரையும் அன்பு செய்யக் கற்றுக்கொள்வதுதான் உண்மையான சவால். மற்றவரை ஒரு தடையாகப் பார்க்காமல் அன்புக்குரிய ஒரு சகோதர சகோதரியாகப் பார்த்து, பகைவர்கள் இல்லா உலகை உருவாக்கவேண்டும் என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்