மரியன்னை திருத்தலங்களுக்குச் சென்று சந்திப்பதை பழகுவோம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பாலைவனச் சோலைகளாகத் திகழும் அன்னைமரியா திருத்தலங்களுக்குச் சென்று அவ்வன்னையின் கைகளில் நம் பணிச்சுமையை ஒப்படைப்போம் என இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மரியன்னை திருத்தலங்களைச் சென்று சந்திப்பதை நாம் கற்றுக்கொள்ளவேண்டும், ஏனெனில், ஆறுதல் மற்றும் கருணையின் பாலைவனச் சோலைகளாகத் திகழும் மரியன்னைத் திருத்தலங்களில் தாய்மைக்குரிய மொழியில் விசுவாசம் வெளிப்படுத்தப்படுகிறது என்பது மட்டுமல்ல, இங்குதான் நாம் நம் பணிச்சுமைகளை அன்னையின் கைகளில் இறக்கிவைத்துவிட்டு, இதயத்தில் அமைதியுடன் வாழ்வை நோக்கித் திரும்புகிறோம் என தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு நாளும் தன் டுவிட்டர் செய்தியை ஒன்பது மொழிகளில் வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கன்னியும் அரசியுமான அன்னைமரியாவின் விழா ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி, அதாவது செவ்வாய்க்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டியும், 23ஆம் தேதி புதன்கிழமை மெக்சிகோவின் குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலம் குறித்து தன் பொது மறைப்போதகத்தில் எடுத்துரைத்ததையொட்டியும் இந்த டுவிட்டர் செய்தியை புதன்கிழமையன்று வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்