தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

நாம் இயேசுவின் சீடர்களா என்பதை கண்டுகொள்ள உதவும் வார்த்தைகள்

நான் உங்களை அன்புகூர்ந்ததுபோல், நீங்களும் ஒருவரையொருவர் அன்புகூருங்கள், என்ற மரபுரிமையே இயேசுவால் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நான் உங்களை அன்புகூர்ந்ததுபோல், நீங்களும் ஒருவரையொருவர் அன்புகூருங்கள், என்ற மரபுரிமையே இயேசுவால் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒருவரை ஒருவர் கிறிஸ்தவர் அன்புகூரவேண்டும் என்ற மரபை வலியுறுத்தி ஆகஸ்ட் 25, வெள்ளிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நான் உங்களை அன்புகூர்ந்ததுபோல் நீங்களும் ஒருவரையொருவர் அன்புகூருங்கள் என யோவான் நற்செய்தி 13ஆம் பிரிவில் இயேசு கூறும் வார்த்தைகளை மேற்கோள்காட்டி, இதுவே இயேசு நமக்கு விட்டுச் சென்றுள்ள மரபு எனக் கூறியுள்ளார்.

நாம் உண்மையிலேயே இயேசுவின் சீடர்கள்தானா என்பதை பகுத்தறிந்து கண்டுகொள்வதற்கான அடிப்படையான கூறு இந்த வார்த்தைகள் என தன் டுவிட்டர் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதுவே அன்பின் கட்டளை எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2023, 14:42