இயேசு நம் மையமாகும்போது வாழ்வுக் கண்ணோட்டம் மாறுகிறது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இயேசுவை நம் மையமாக நாம் வைக்கும்போது, வாழ்வு குறித்த நம் கண்ணோட்டம் மாறுகிறது என தன் ஆகஸ்ட் 9, செவ்வாய்க்கிழமை டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை மாதம் முழுவதும் விடுமுறையில் இருந்தபோது சில ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் டுவிட்டர் செய்திகளை வழங்கியிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக இளையோர் தினத்தை லிஸ்பனில் சிறப்பித்து, உரோம் திரும்பியுள்ள நிலையில், இயேசுவை நம் வாழ்வின் மையமாகக் கொள்வதால் விளையும் நன்மைகள் குறித்து எடுத்தியம்பியுள்ளார்.
நாம் இயேசுவை மையமாகக் கொண்டு செயல்படும்போது நம் வாழ்வு கண்ணோட்டம் மாறுவது மட்டுமல்ல, நம் உழைப்பு மற்றும் துன்பதுயர்கள் மத்தியிலும் அவரின் ஒளியின் வழிகாட்டுதலை உணர்வதோடு, இயேசுவின் ஆவியால் ஆறுதலை உணர்ந்து, அவரின் வார்த்தையால் ஊக்கம்பெற்று, அவரின் அன்பால் நிலைப்படுத்தப்படுகிறோம் என தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்