தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

சமூகத்தின் விளிம்பு நிலையில் வாடும் மக்களுக்காகச் செபிப்போம்!

இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 15 கோடி மக்கள் வீடற்ற நிலையில் வாழ்கின்றனர். இது இங்கிலாந்து மற்றும் பிரான்சின் மொத்த மக்கள் தொகைக்கு சமம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மனித மாண்பற்ற வாழ்க்கைச் சூழல்களில் சமூகத்தின் விளிம்பு நிலையில் வாடும் மக்களுக்காக ஒன்றுபட்ட மனதோடு இறைவேண்டல் செய்ய அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 29, இப்புதனன்று, வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்படிப்பட்ட மக்கள் நிறுவனங்களால் புறக்கணிக்கப்படக்கூடாது என்றும், அவர்கள் ஒருபோதும் வெளியேற்றப்படக்கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்றைய உலகில் தங்கள் இல்லங்களை இழந்து தெருக்களிலும் சமூகத்தின் விளிம்பு நிலையிலும் வாடும் மக்களைக் குறிப்பிட்டு இவ்வாறு தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 15 கோடி மக்கள் வீடற்ற நிலையில் வாழ்கின்றனர். இது இங்கிலாந்து மற்றும் பிரான்சின் மொத்த மக்கள் தொகைக்கு சமம். மேலும் கோவிட்-19 பெருந்தொற்றும் இத்துயர நிலையை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2023, 14:14