தேடுதல்

பிறரன்பு நிறுவனங்களுடன் போர்த்துக்கல்லில் திருத்தந்தை பிறரன்பு நிறுவனங்களுடன் போர்த்துக்கல்லில் திருத்தந்தை  (ANSA)

வின்சென்ட் தே பால் சமூக மையத்தில் திருத்தந்தை

ஏழைகளில் கடவுளை நேசிப்பது" என்ற நோக்கத்துடனும் இனம், மதம், நிறம் சமூக வர்க்க வேறுபாடு இன்றி உடன் வாழும் சகோதரர்களுக்கு பணியாற்றுவதில் கடவுளின் அன்பின் அடையாளமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுச் செயல்படுகின்றது இச்சமூக மையம்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

லிஸ்பன் உள்ளூர்  நேரம் காலை 9.45 மணிக்கு செராபினா பங்குதள மையத்தில், பிறரன்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் அதன் பொறுப்பாளர்களை சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பங்குத்தந்தையும் மையச்செயல்பாடுகளுக்குப் பொறுப்பாளருமான அருள்பணியாளர் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார் அதன்பின், அப்பகுதியில் நடைபெற்றுவரும் செயல்பாடுகள் குறித்த தங்களது கருத்துக்களை உறுப்பினர்கள் திருத்தந்தையின் முன் எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து திருத்தந்தையின் உரை ஆரம்பமானது.

தனது உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த அனைவரோடும் இணைந்து விண்ணகத்திலிருக்கின்ற எங்கள் தந்தையே என்ற செபத்தை செபித்து, அதன் முடிவில் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார். அதன்பின் அங்கிருந்து 5.2 கிமீ காரில் பயணித்து  மீண்டும் திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். லிஸ்பன் உள்ளூர் நேரம் காலை 11.00 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் மாலை 3.30 மணிக்கு திருப்பீடத்தூதரகம் வந்துசேர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  10 இளையோரோடு மதிய உணவினை உண்டு மகிழ்ந்தார். உணவுக்குப்பின் சற்று இளைப்பாறினார்.

ஆகஸ்ட் 4 வெள்ளிக்கிழமை காலை மணிக்கு செராபினா பங்குதள மையத்தில், பிறரன்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் அதன் பொறுப்பாளர்களை சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாலையில் மன்னர் ஏழாம் எட்வர்ட் பூங்காவில் இளையோருடன் இணைந்து சிலுவைப்பாதை நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2023, 12:44