தேடுதல்

Scholas Occurrentes இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ். Scholas Occurrentes இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்.   (ANSA)

Scholas Occurrentes இல்லத்தில் திருத்தந்தை

Scholas Occurrentes என்பது திருப்பீட அங்கீகாரம் பெற்ற ஒரு பன்னாட்டு அமைப்பாகும், இது 190 நாடுகளில் 4,00,000 க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியார் கல்வியை உள்ளடக்கிய ஒரு வலையமைப்புடன் 10 இலட்சத்திற்கும் அதிகமான சிறார் மற்றும் இளையோரைச் சென்றடைகிறது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

காஸ்காய்ஸ் என்பது லிஸ்பனுக்கு தெற்கே 25 கிமீ தொலைவில் உள்ள அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும். ஒரு மீன்பிடி நகரமாக  உயிரோட்டமான மற்றும் காஸ்மோபாலிட்டன் சுற்றுலா தலமாகத் திகழும் இப்பகுதி 14 ஆம் நூற்றாண்டில் லிஸ்பனுக்கு செல்லும் கப்பல்களுக்கான ஒரு பரபரப்பான துறைமுகமாக மாறியபோது பெரும் வளர்ச்சியை அடைந்தது. ஆனால் 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் கட்டிடக்கலைஞர் பிராகன்சாவின் மன்னர் முதலாம் லூயிஸ் 1870ஆம் ஆண்டில் நகரத்தின் கோட்டையை போர்த்துகீசிய அரச குடும்பத்தின் கோடைகால இல்லமாக மாற்றினார். 1946ஆம் ஆண்டு முதல் இத்தாலிய குடியரசின் அறிக்கையைத் தொடர்ந்து, இத்தாலியின் கடைசி மன்னரான இரண்டாம் Umberto நாடு கடத்தப்பட்ட இடமாக இது நினைவுகூரப்படுகிறது. மன்னர் வாழ்ந்த மாளிகை இன்று ஆடம்பர விடுதியாக மாறியுள்ளது.

கஸ்காஸ் உள்ளூர் நேரம் காலை 10.40 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம்  பிற்பகல் 3.10 மணிக்கு Scholas Occurrentes இல்லத்தை வந்தடைந்த திருத்தந்தையை அதன் தலைவர் வரவேற்றார். மூன்று வேறுபட்ட மதத்தைச் சார்ந்த இளையோர் தங்களது சான்று வாழ்வை திருத்தந்தையின் முன் பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருத்தந்தையுடன் இளையோர் தங்களாது கருத்துக்களையும் கேள்விகளையும் பகிர்ந்து கொண்டனர். திருத்தந்தை அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார். இவ்வாரு உரையாடிய திருத்தந்தை அவர்களுக்கு நல்ல சமாரியன் ஓவியத்தை பரிசாக அளித்து, அவரைப்போல் இரக்ககுணம் உடையவர்களாக, அயலாருக்கு அன்பு செலுத்துபவர்களாக வாழ வலியுறுத்தினார். அதன்பின் அங்குள்ள சுவர் ஓவியத்தில் பச்சை நிற வண்ணத்தினை சேர்த்தார். அதன்பின் கூடியிருந்த மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார். அவ்விடத்திலிருந்து கிளம்பும்முன் அமைதியின் அடையாளமாக  நடப்பட உள்ள ஒலிவ மரக் கன்றுகளைகளை ஆசீர்வதித்தார் திருத்தந்தை.

இளையோருடன் உரையாடும் திருத்தந்தை
இளையோருடன் உரையாடும் திருத்தந்தை

கஸ்காஸ் உள்ளூர் நேரம் காலை 11.30 மணிக்கு அங்கிருந்து கிளம்பி 33 கி.மீ. தூரம் காரில் பயணம் செய்து, திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மதிய உணவிற்குப் பின் சற்று இளைப்பாறிய திருத்தந்தை மாலையில் ஏழாம் எட்வர்ட் அவர்களின் பெயரிலான  பூங்காவில் அவருக்கு அளிக்கப்பட இருக்கும் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

போர்த்துக்கல் கத்தோலிக்க பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பு, Scholas Occurrentes இளையோர் சந்திப்பு என இரு இடங்களில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள், மாலையில், இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்ட் அவர்களின் பெயரிலான  பூங்காவில் இளையோருக்கு உரையாற்றி தனது இரண்டாவது நாள் திருத்தூதுப்பயணத்தை நிறைவு செய்ய உள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2023, 12:00