இத்தாலிய உக்ரேனிய கிரேக்க,கத்தோலிக்க திருஅவைக்குப் புதிய விதிகள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இத்தாலியில் வசிக்கும் பைசண்டைன் வழிபாட்டு முறை உக்ரேனிய கத்தோலிக்க விசுவாசிகளுக்கான அப்போஸ்தலிக்க நிர்வாகம் மற்றும் இத்தாலிய ஆயர் பேரவை (CEI) ஆகியவற்றுக்கு இடையேயான உறவுகளில் பல விதிகளை திருத்தந்தை பிரான்ஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 28, 2023 என்று தேதியிடப்பட்டுள்ள இந்த ஆவணமானது, கடந்த ஜூன் 23-ஆம் தேதியன்று, கீழை வழிபாட்டு முறை திருஅவைகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவரும், புதிய கர்தினாலாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான Claudio Gugerotti அவர்களுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பிற்குப்பின் இது நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய ஆயர் பேரவையின் விதியின்படி பைசண்டைன் வழிபாட்டு முறை அப்போஸ்தலிக்க நிர்வாகி எவ்வாறு உறுப்பினராக உள்ளார் என்பதையும், அதன் விளைவாக, அதன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும் விதிகள் மற்றும் அதன் வழிகாட்டுதல்களுக்குக் கட்டுப்படுவதையும் திருத்தந்தையின் இந்த எழுத்துப்பூர்வமான அறிக்கை விளக்குகிறது. மேலும், இவ்விரு திருஅவைகளின் ஆயர்களுக்கு இடையேயான ஒன்றிப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் நெருக்கமான உறவுகளையும் இது பராமரிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்