தேடுதல்

திருத்தந்தையுடன் உகாண்டா பிரதமர் திருத்தந்தையுடன் உகாண்டா பிரதமர்  (Vatican Media)

திருத்தந்தையுடன் உகாண்டா பிரதமர் சந்திப்பு

உகாண்டா நாட்டு நிறுவனங்களால் ஆப்ரிக்க அகதிகள் மட்டுமல்ல, மத்திய ஆசிய பகுதியிலிருந்து வரும் அகதிகளும் வரவேற்கப்படுகிறார்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உகாண்டா குடியரசின் பிரதமர், திருமதி Robinah Nabbanja அவர்கள், ஜூலை 24, திங்கள்கிழமையன்று காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

ஏறக்குறைய 20 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, உகாண்டா நாட்டு நிறுவனங்களால் அகதிகள் தராளமனதுடன் வரவேற்கப்படுவது, அதாவது, ஆப்ரிக்க அகதிகள் மட்டுமல்ல, மத்திய ஆசிய பகுதியிலிருந்து வரும் அகதிகளும் வரவேற்கப்படுகிறார்கள் என பிரதமர் Nabbanja திருத்தந்தையிடம் விளக்கினார்.

உகாண்டா பிரதமருக்கு பரிசாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘அமைதியின் தூதுவர்களாக செயல்படுங்கள்’ என்ற வார்த்தை பொறிக்கப்பட்டு, புறா ஒன்று ஒலிவக் கிளையுடன் இருக்கும் வெண்கல கலைவடிவம் ஒன்றையும், திருத்தந்தையின் சில ஏடுகளையும் பரிசாக வழங்கினார்.

திருப்பீடச் செயலர் மற்றும் திருப்பீட வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் உகாண்டா பிரதமர் ஜூலை 25, செவ்வாய்க்கிழமையன்று சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2023, 15:29