ஜூலை 23ல் வத்திக்கானில் தாத்தா பாட்டிகள் தின திருப்பலி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இவ்வாண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் குறித்த விவரங்களை ஜூலை 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டது திருப்பீடத் தகவல்துறை.
ஜூலை மாதம் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று திருஅவையில் தாத்தா பாட்டிகள் தினம் சிறப்பிக்கப்படுவதையொட்டி, அந்நாளில் உரோம் நேரம் காலை 10 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் பொதுமக்களுடன் திருப்பலி நிறைவேற்ற உள்ளார் திருத்தந்தை.
போர்த்துக்கல்லில் இடம்பெறவுள்ள 37வது உலக இளையோர் தினத்தையொட்டி ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை போர்த்துக்கல்லின் லிஸ்பனுக்கும், அதன்பின் பாத்திமா திருத்தலத்திற்கும் செல்ல உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
31ஆம் தேதி ஆகஸ்ட் முதல் 4ஆம் தேதி செப்டம்பர் வரை மங்கோலியாவில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்