முதியோர்களின் இருப்பு விலைமதிப்பற்றது – திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
குடும்பம் மற்றும் சமூகத்தில் விலைமதிப்பற்ற ஒன்றாக முதியோர்களின் இருப்பு உள்ளது என்றும் அத்தகைய முதியோர்களை ஒருபோதும் கைவிட்டு விடாதீர்கள் என்றும் டுவிட்டர் குறுஞ்செய்தி வழியாக வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 22 சனிக்கிழமை புனித மகதலா மரியாவின் திருவிழாவை சிறப்பிக்கும் வேளையில் ஜூலை 23 ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கப்பட உள்ள உலக முதியோர் தினத்தை நினைவுகூர்ந்து #தாத்தா பாட்டி மற்றும் முதியோர் # பொது நிலையினர் குடும்பம் மற்றும் வாழ்க்கை என்ற தலைப்பில் இவ்வாறு தனது கருத்துக்களை குறுஞ்செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முதியோர்களை ஒருபோதும் கைவிட்டுவிடக்கூடாது. நமது குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் அவர்களின் இருப்பு விலைமதிப்பற்றது. நாம் அனைவரும் ஒரே பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்கிறோம், நமது வேர்களைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள மக்களின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதை அவர்களின் இருப்பு நமக்கு நினைவூட்டுகின்றது என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்