மக்கள் வணிகப் பொருட்களாக கடத்தப்படுவது குறித்த விழிப்புணர்வு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஜூலை மாதம் முப்பதாம் தேதி உலகில் சிறப்பிக்கப்பட்ட உலக நட்புணர்வு தினம் மற்றும் மனிதர்கள் வணிகப் பொருட்களாகக் கடத்தப்படுவதற்கு எதிரான விழிப்புணர்வு தினம் ஆகியவைகளைக் குறிப்பிட்டு மக்களின் விழிப்புணர்வுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 30, ஞாயிறு நண்பகல் மூவேளை செபஉரைக்குப்பின் இந்த அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக நட்புணர்வு தினம், மக்களிடையேயும் கலாச்சாரங்களிடையேயும் நிலவ வேண்டிய நட்புணர்வை எடுத்துரைக்கும் அதேவேளை, மக்கள் வணிகப் பொருட்களாக கடத்தப்படும் நிலைகளுக்கு எதிராக உழைக்க வேண்டியது குறித்த விழிப்புணர்வை, மக்கள் பொருட்களாக நடத்தப்படுவதற்கு எதிரான நாள் குறிக்கிறது என மேலும் கூறினார்.
மனிதர்கள் வணிகப் பொருட்களாக கடத்தப்படுவதால், குழந்தைகள், பெண்கள், பணியாளர்கள் என எண்ணற்றோர் சுரண்டப்படுவதும், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதும், பாராமுகத்தையும் ஒதுக்கல்களையும் எதிர்நோக்குவதையும் காணமுடிகிறது என்ற கவலையையும் வெளியிட்டார் திருத்தந்தை.
மனிதர்கள் வணிகப் பொருட்களாக கடத்தப்படுவதற்கு எதிராக உழைத்துவருபவர்களுக்கு தன் நன்றியையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்