தேடுதல்

2022ஆம் ஆண்டு இடம்பெற்ற புதிய கர்தினால்கள் நியமன திருப்பலி 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற புதிய கர்தினால்கள் நியமன திருப்பலி  (Vatican Media)

திருஅவையில் 21 புதிய கர்தினால்கள் அறிவிப்பு

மலேசிய ஆயர், ஹாங்காங் ஆயர், சலேசிய துறவுசபையின் அதிபர் உட்பட 21 பேர் திருஅவையில் புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருஅவையில் புதிய கர்தினால்களை நியமிக்கும் கர்தினால்கள் அவைக்கூட்டம் இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வத்திக்கானில் இடம்பெறும் என அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 21 புதிய கர்தினால்களின் பெயர்களையும் வெளியிட்டார்.

திருப்பீடத்தின் மூன்று துறைகளின் தலைவர்களாக அண்மையில் நியமிக்கப்பட்ட பேராயர்கள், மலேசிய ஆயர், ஹாங்காங் ஆயர், யெருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, சலேசிய துறவுசபையின் அதிபர் உட்பட 21 பேர் திருஅவையில் புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை  திருஅவையில் அதிகாரப்பூர்வமாக கர்தினால்களாக உயர்த்துவது செப்டம்பர் 30ஆம் தேதி, உலக ஆயர்கள் கூட்டத்தொடருக்கு முன்னர் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 9, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் இதனை அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைமக்களின் பணிக்கான உரோமை ஆயரின் சேவையில் ஒத்துழைக்க உள்ள இந்த புதிய கர்தினால்களுக்காக செபிக்குமாறும் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

  • விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறையின் புதிய தலைவர், பேராயர் Victor Manuel Fernandez,
  • ஆயர்களுக்கான திருப்பீடத்துறையின் புதிய தலைவர், பேராயர் Robert Francis Prevost, 
  • கீழைவழிபாட்டுமுறை திருப்பீடத்துறையின் புதிய தலைவர், பேராயர் Claudio Gugerotti
  • மலேசியாவின் Penang ஆயர் Sebastian Francis,
  • ஹாங்காங்கின் ஆயர் Stephen Chriw Sau-yan,
  • யெருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, பேராயர் பியெர் பாத்திஸ்தா பிட்ஸபாலா,
  • அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர் Christophe Louis Yves Georges Pierre,
  • இத்தாலிக்கான திருப்பீடத்தூதர் பேராயர் Emil Paul TSCHERRIG,
  • தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் பேராயர் Stephen BRISLIN,
  • அர்ஜெண்டினாவின் Córdoba பேராயர் Ángel Sixto ROSSI,
  • கொலம்பியாவின் Bogotá பேராயர் Luis José RUEDA APARICIO,
  • போலந்தின் Łódź பேராயர் Grzegorz Ryś,
  • சூடானின் ஜூபா பேராயர்  Stephen Ameyu Martin Mulla,
  • இஸ்பெயினின் மத்ரித் பேராயர் José Cobo Cano,
  • டன்சானியாவின் Tabora வாரிசுரிமை பேராயர் Protase Rugambwa,
  • இஸ்பெயினின் Ajaccio ஆயர் François-Xavier Bustillo,
  • போர்த்துக்கல்லின் லிஸ்பன் துணை ஆயர் Américo Manuel Alves Aguiar,
  • சலேசிய சபையின் அதிபர், இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அருள்பணி Ángel Fernández Artime,
  • இத்தாலியைச் சேர்ந்த 83 வயதான பேராயர் Agostino Marchetto,
  • வெனிசுவேலாவைச் செர்ந்த 84 வயதான பேராயர் Diego Rafael Padrón Sánchez,
  • அர்ஜெண்டினாவின் 96 வயதான அருள்பணி Luis Pascual,

ஆகியோர் புதிய கர்தினால்களாக திருத்தந்தையால் ஜூலை 9 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் அறிவிக்கப்பட்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 July 2023, 14:01