தேடுதல்

திருத்தந்தையுடன் வியட்நாமின் அரசுத் தலைவர் Vo Van Thuong   திருத்தந்தையுடன் வியட்நாமின் அரசுத் தலைவர் Vo Van Thuong   (ANSA)

வியட்னாம் மற்றும் திருப்பீடமிடையே புதிய ஒப்பந்தம்!

இவ்வுடன்பாடு வியட்நாம் மற்றும் திருப்பீடத்திற்கிடையே நிகழும் உறவுகளை மேம்படுத்த ஒரு பாலமாக அமையும் : திருப்பீடச் செய்தித் தொடர்பக அறிக்கை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வியட்னாம் தலைநகர் ஹனோயில் திருத்தந்தையின் பிரதிநிதியை நியமனம் செய்வதற்குத் திருப்பீடம்  மற்றும் வியட்நாம் உறுதியான உடன்பாட்டை எட்டியுள்ளதாகத் திருப்பீடச் செய்தித்தொடர்பாகம் அறிவித்துள்ளது.

ஜூலை 27, இவ்வியாழனன்று, வத்திக்கானில் இந்தயொரு உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ள திருப்பீடச் செய்தித் தொடர்பகம், 2023-ஆம் ஆண்டு, மார்ச் 31, வெள்ளியன்று, வத்திக்கானில் வியட்நாம் மற்றும் திருப்பீடத்திற்கு இடையேயான கூட்டுப் பணிக்குழுவின் 10-வது அமர்வின் அடிப்படையிலும், இருதரப்பு உறவுகளைத் தொடரும் விருப்பத்தின் அடிப்படையிலும், அந்நாட்டின் அரசுத் தலைவரின் வருகை இடம்பெற்றதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் தலைவர் Vo Van Thuong  மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது, ​​வியட்நாம் மற்றும் திருபீடத்திற்கு இடையேயான உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் கத்தோலிக்கச் சமூகத்தின் நேர்மறையான பங்களிப்புகளுக்காகத் திருபீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளுக்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் அவ்வறிக்கைத் கூறுகின்றது.

அந்நாட்டிற்கானத் திருத்தந்தையின் பிரதிநிதி இவ்வொப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ள ஆணைகளின்படி செயல்படுவார் என்றும், வியட்நாமின் வளர்ச்சிக்காகவும், அங்குள்ள கத்தோலிக்கச் சமூகத்தின் ஒற்றுமைக்காகவும் தன் பங்களிப்பை வழங்குவார் என்றும் நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டதாவும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2023, 14:00