தேடுதல்

அசன்சோல் மறைமாவட்ட ஆலயம் அசன்சோல் மறைமாவட்ட ஆலயம்  

அசன்சோல் மறைமாவட்ட ஆயராக பேரருள்திரு Elias Frank நியமனம்

புதிய ஆயர் Elias Frank அவர்கள் தற்போது உரோமில் உள்ள உர்பானோ திருப்பீட பல்கலைக்கழகத்தின் திருச்சட்டவியல் பேராசியராக பணியாற்றி கொண்டிருக்கின்றார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்  

இந்தியாவின் Asansol மறைமாவட்ட ஆயராக அதே மறைமாவட்டத்தைச் சார்ந்த பேரருள்திரு Elias Frank அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 3 திங்கள் கிழமை அசன்சோல் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட  பேரருள்திரு Elias Frank அவர்கள் தற்போது உரோமில் உள்ள உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தின் திருச்சட்டவியல் பேராசியராக பணியாற்றி கொண்டிருக்கின்றார்.

ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேரருள்திரு Elias Frank அவர்கள் மங்களுர் மறைமாவட்டத்தில் உள்ள பண்ட்வாலில் 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் பிறந்தார். பரசாத் தூய ஜான் மரியவியான்னி குருமடத்தில் இளங்குருமடப் பயிற்சியையும், பராக்பூரில் உள்ள மார்னிங் ஸ்டார் உயர்குருமடத்தில் தத்துவ இயலையும், உரோமில் உள்ள உர்பான் பல்கலைக்கழகத்தில் இறையியலையும் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர்.

1993ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்மறைமாவட்ட குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 1997ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்மறைமாவட்டத்திலிருந்து  அசன்சோல் மறைமாவட்டம் உருவானபோது புதிய மறைமாவட்டத்திற்குச் சென்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2023, 14:30