உரோமை உயர்குருமட தலைவராக ஆயர் Michele Di Tolve
மெரினா ராஜ் – வத்திக்கான்
உரோமை மறைமாவட்ட குருமாணவர்களின் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகளுக்காக உரோமை பாப்பிறை உயர்குருமட தலைவராக ஆயர் Michele Di Tolve அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 5 புதன்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இந்த நியமனத்தின்படி ஆயர் Michele Di Tolve அவர்கள், குருமாணவர்களின் உருவாக்கம் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணிகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் பணியினைச் செய்வார்.
உரோமை மறைமாவட்ட உயர் குருமடத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் Michele Di Tolve அவர்கள் ஆயர் பேரவையின் உடன்படிக்கையின்படி தனது செயல்களை ஆற்றுவார் என்றும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த செயல்களுக்குத் திருத்தந்தையிடம் நேரடியாக அதனைப்பற்றி எடுத்துரைப்பார் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி, உரோமை மறைமாவட்ட பணிகள் தொடர்பாக திருத்தூது கொள்கைகளாக எக்லேசியாரம் கம்யூனியன் வெளியிடப்பட்டதைத்தொடர்ந்து மே 26ஆம் தேதி உரோமை மறைமாவட்டத்தின் துணை ஆயர்கள் மறைமாவட்டத்தின் துறைகள், அமைப்புக்கள் மற்றும் மேய்ப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்