சவால்களைச் சந்திக்கும் புனித மக்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்
தங்கள் வாழ்வில் எதிர்ப்புகளைச் சந்திக்கும் புனித வாழ்வு வாழும் ஆண்களும் பெண்களும் இறைவேண்டல் வழியாக நம்பிக்கையின் ஒளியை ஏற்றுகின்றனர் : திருத்தந்தை பிரான்சிஸ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் -வத்திக்கான்
புனிதமான பெண்களும் ஆண்களும் மற்றவர்களை விட எளிதான வாழ்க்கையைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அவர்களும் சவால்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்தவர்கள்தான் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஜூன் 30, இவ்வெள்ளியன்று, தான் வெளியிட்டுள்ள டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் வாழ்வில் எதிர்ப்புகளைச் சந்திக்கும் அவர்கள் இறைவேண்டல் வழியாக நம்பிக்கையின் ஒளியை ஏற்றுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
30 ஜூன் 2023, 15:39