தேடுதல்

பெற்றோர் மற்றும் அவர்தம் குழந்தைகளுடன் திருத்தந்தை பெற்றோர் மற்றும் அவர்தம் குழந்தைகளுடன் திருத்தந்தை   (ANSA)

பெற்றோரே, நம்பிக்கையின் நடுநிலையாளர்களாக இருங்கள் :திருத்தந்தை

உலகெங்கிலுமுள்ள அனைத்துப் பெற்றோரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து அவர்களைப் போற்றுவதற்கு இந்நாள் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அன்பான பெற்றோரே, உங்கள் குழந்தைகளிடம் உங்கள் நம்பிக்கையைப் பற்றி பேசுவதில் நீங்கள் ஒருபோதும் சோர்வடைய வேண்டாம் என்று தான் வெளியிட்ட குறுஞ்செய்தி ஒன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 1, இவ்வியாழனன்று, அனைத்துலக பெற்றோர் தினம் கொண்டாடப்படும் வேளை, அனைத்து பெற்றோருக்கும் இவ்வாறு அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் பெற்றோரிடமிருந்து நீங்கள் பெற்ற நம்பிக்கையின் நடுநிலையாளர்களாக  இருக்க உங்களுக்கு எப்போதும் பலம் இருக்கட்டும் என்றும் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் ஜூன் முதல் நாள்  பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினமாக அறிவிக்கப்பட்டது. இது முதலில் அன்னையர் நாளாக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது தந்தையர் நாளாகத் தனியாகக் கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது விடுமுறை நாட்களைக் கணக்கில் கொண்டு பெற்றோர் இருவரையும் சேர்த்து கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 June 2023, 13:58