தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

புனித அலாய்சியு கொன்சாகா இளைஞர்களின் பாதுகாவலர்:திருத்தந்தை

இயேசு சபையைச் சார்ந்த புனித அலாய்சியு கொன்சாகா, கடவுள்மீதும், தனக்கு அடுத்திருப்போர்மீதும் மிகுதியான அன்புகொண்டிருந்தார் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கத்தோலிக்க இளையோரின் பாதுகாவலர் புனித அலாய்சியு கொன்சாகாவை இன்று நாம் நினைவு கூர்கிறோம் என்றும்,  இயேசு சபையைச் சார்ந்த இவ்விளவல், கடவுள்மீதும், தனக்கு அடுத்திருப்போர்மீதும் மிகுதியான அன்புகொண்டிருந்தார் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 21, இப்புதனன்று, இப்புனிதரின் விழா சிறப்பிக்கப்படும் வேளை, அவரது வாழ்வு குறித்து இவ்வாறு தனது டுவிட்டர் குறுஞ்செய்தியில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித அலாய்சியு கொன்சாகா, பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார் என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, இத்தருணத்தில் உலகம் முழுவதிலுமுள்ள இளைஞர்களை அவருடைய பரிந்துரையிலும் பாதுகாவலிலும் ஒப்படைக்கிறேன் என்றும் உரைத்துள்ளார்.

தனது தந்தையின் எதிர்ப்பையும் மீறி 1587-ஆண்டு இயேசு சபையில் சேர்ந்த அலாய்சியு கொன்சாகா, குருமானவராகப் படித்துக்கொண்டிருந்தபோது உரோமையில் பலர் பிளேக் நோயினால் தாக்கப்பட்டதை அறிந்தார். அந்நோயாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர்களுக்குப் பணியாற்றி வந்தச் சூழலில் இவரும் அக்கொடிய நோயினால் தாக்கப்பட்டு 1591-ஆம் ஆண்டு இறந்தார். அப்போது அவருக்கு வயது 23 மட்டுமே. 1726-ஆம் ஆண்டு திருத்தந்தை 13-ஆம் பெனடிக்ட் இவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். இரு திருத்தந்தையர்கள் இவரை இளைஞர்களின் பாதுகாவலர் என்று அழைக்கத் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 June 2023, 13:42