தேடுதல்

ஆப்பிரிக்கக் கல்வி ஒப்பந்தம் குறித்த பிரதிநிதிகள் குழுவினருடன் திருத்தந்தை ஆப்பிரிக்கக் கல்வி ஒப்பந்தம் குறித்த பிரதிநிதிகள் குழுவினருடன் திருத்தந்தை   (Vatican Media)

ஆப்பிரிக்காவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறோம் : திருத்தந்தை

கிறிஸ்தவம் என்பது ஒவ்வொரு கலாச்சாரத்தின் சிறந்த பகுதியுடன் பொருந்துகிறது மற்றும் உண்மையான மனிதனாக இல்லாததைத் தூய்மைப்படுத்த உதவுகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒவ்வொருவருக்கும் கல்வியை ஆதரிக்க வேண்டிய கடமை உள்ளது என்றும், கல்வியில் நாம் அதிக சவால்களைச் சந்திக்க ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 1, இவ்வியாழனன்று, ஆப்பிரிக்கக் கல்வி ஒப்பந்தம் குறித்த பிரதிநிதிகள் குழு ஒன்றிற்கு வழங்கிய உரையில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கல்வியை வழங்குவதிலும் அதனை வளர்ப்பதிலும் ஒன்றிணைத்து செயல்படுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

சகோதரர்களே, நீங்களே உலகின் இளைய கண்டத்தின் மேய்ப்பர்கள், துல்லியமாகக் கூறவேண்டுமெனில், உங்களின் மிகப்பெரிய செல்வம் இளைஞர்கள்தாம். ஆகவே, எதேச்சதிகாரம் இல்லாமல், அவர்களின் குரலையும் கருத்துக்களையும் கேட்க வேண்டுமென சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியானவர் அவர்கள் வழியாகவும் பேசுகிறார், மேலும் அவர்கள் அழகான மற்றும் வியக்கத்தக்க காரியங்களைப் பரிந்துரைக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆப்பிரிக்காவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறோம், ஏனென்றால் எதிர்காலப் பாதைகளைப் பட்டியலிடக்கூடிய ஒரு கண்டமாக இருக்க வேண்டிய அனைத்தையும் அது கொண்டுள்ளது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள், நான் பெரிய கனிம வளங்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றம் மற்றும் அமைதி செயல்முறைகளை மட்டும் குறிப்பிடவில்லை, மாறாக, அனைத்திற்கும் மேலாக கல்வி வளங்கள் குறித்தும் நான் சிந்திக்கிறேன் என்றும் விளக்கினார்.

நெல்சன் மண்டேலா போன்ற மிகச் சிறந்த கல்வியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் எடுத்துகாட்டை நீங்கள் பின்பற்றலாம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிறவெறியால் ஒடுக்கப்பட்ட தனது நாட்டில் நல்லிணக்கம் மற்றும் கல்வி வழியாகவே அவர் பல்வேறு இனங்களுக்கிடையில் ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்பினார் என்றும், உண்மையில், உலகை மாற்றுவதற்கு ஒருவர் பயன்படுத்தக்கூடிய மிக வலிமைவாய்ந்த கருவி கல்விதான் என்று அவர் வாதிட்டார் என்றும் எடுத்துக்காட்டினார்.

பொருளாதார அல்லது சமூக நிலைமைகளைப் பொருட்படுத்தாமல், தனது நாட்டு மக்கள் அனைவரின் வளர்ச்சிக்கும் கல்விக் கொள்கைகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிந்த 'கல்வியாளர்' என்று அழைக்கப்படும் இறை ஊழியர் ஜூலியஸ் நைரேரிடமிருந்தும் நீங்கள் புத்தெழுச்சி பெறலாம் என்றும், அவர் தனது கத்தோலிக்க நம்பிக்கையால் நிலைநிறுத்தப்பட்டார் மற்றும் நற்கருணை கொண்டாட்டத்தின் வழியாகவே இது அவருக்குச் சாத்தியமாயிற்று என்றும் விளக்கினார் திருந்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 June 2023, 13:32