தேடுதல்

குழந்தைகளைச் சந்திக்கும் திருத்தந்தை குழந்தைகளைச் சந்திக்கும் திருத்தந்தை   (ANSA)

ஜெமெல்லி மருத்துவமனையில் குழந்தைகளைச் சந்தித்தார் திருத்தந்தை

திருத்தந்தை விரைவில் குணமடையவேண்டி வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பிய குழந்தைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரின் இந்தச் சந்திப்பு அமைந்தது : திருப்பீடச் செய்தித் தொடர்பகம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூன்றாவது முறையாக ஜெமெல்லி மருத்துவமனையின் பத்தாவது தளத்திலுள்ள இளம் நோயாளிகளைச் சந்தித்தார் என்றும், ஜூன் 15, வியாழன், இன்று காலை மருத்துவமனையின் உயர் நிர்வாகத்தினரைச் சந்தித்து வாழ்த்தினார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

இம்முறையும், ஜெமெல்லி மருத்துவமனையின் குழந்தைகள் புற்றுநோயியல் மற்றும் குழந்தைகள் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திக்கத் தவறவில்லை என்றும் கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் திருத்தந்தையைக் கைதட்டலுடன் வரவேற்ற குழந்தைகளுக்கு, அவர் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் தனது நெருக்கத்தையும், பாசத்தையும், அன்பின் உணர்வுகளையும் வெளிப்படுத்தினார் என்றும் தெரிவிக்கிறது அவ்வறிக்கை.

கடந்த ஜூன்-9-ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, திருத்தந்தை விரைவில் குணமடையவேண்டி வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பிய குழந்தைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரின் இந்தச் சந்திப்பு அமைந்தது. விரைவில் நலம்பெற்றுத் திரும்பி வாருங்கள் என்றும், எப்போதும் உங்களுடன் இருக்கின்றோம் என்றும் அக்குழந்தைகள் ஓவியங்கள் மற்றும் சிற்பத்துடன் திருத்தந்தைக்குக் கடிதம் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 June 2023, 14:39