உயிர்த்த கிறிஸ்துவே நமது எதிர்காலம் : திருத்தந்தை பிரான்சிஸ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஊடகச் சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் நலத்தைக் குறித்துகாட்டும் முக்கியமான குறியீடாகும் என்றும், உண்மையில், சர்வாதிகாரங்கள் அதைக் கட்டுப்படுத்தவோ அல்லது அதை அடக்கவோ முற்படுகின்றன என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 3, இப்புதனன்று, வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல துயரச் சூழ்நிலைகளை மறக்காமல் இருக்க உதவும் சுதந்திரமான ஊடகவியலாளர்கள் நமக்குத் தேவை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உயிர்த்த கிறிஸ்துவே நமது எதிர்காலம்
உயிர்த்த கிறிஸ்துவே நமது எதிர்காலம். அவரே முதலும் முடிவும் மற்றும் மனிதகுல வரலாற்றின் இறுதி இலக்கு என்றும், நமது வாழ்வு எவ்வளவு பலவீனம் நிறைந்ததாக இருக்கின்றதோ, அதேஅளவுக்கு அது அவருடைய கரங்களில் உறுதியாக வைக்கப்பட்டுள்ளது என்றும் தனது இரண்டாவது குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்னையின் பரிந்துரையை நாடுவோம்
போலந்தின் அரசியான அன்னை மரியாவின் பெருவிழாவில், அந்நாட்டிற்காகவும், ஐரோப்பா முழுமைக்காகவும், நம்பிக்கையில் விடாமுயற்சி, ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பிற்காகவும், எல்லாவற்றிற்கும் மேலாக அமைதிக்காகவும், குறிப்பாக, அருகிலுள்ள உக்ரைனுக்காகவும் அவரது பரிந்துரையைக் கேட்டு மன்றாடுவோம் என்று தனது மூன்றாவது குறுஞ்செய்தியில் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்