வத்திக்கான் திருஅவை தீர்ப்பாயத்தில் புதிய அதிகாரிகள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மே 2, இச்செவ்வாயன்று, வத்திக்கான் திருஅவைத் தீர்ப்பாயத்தில் இரண்டு புதிய அதிகாரிகளை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் நகரத்தின் வட்டாரத் திருஅவைத் தீர்ப்பாயத்தில் Sora-Cassino-Aquino-Pontecorvo மறைமாவட்டத்தின் முதன்மை குரு பேரருள்திரு Alessandro Recchia அவர்களைத் திருமணப் பிணைப்புக் காப்பாளராக (Defender of the Bond) நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும் உரோமையுள்ள உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத் திருஅவைச் சட்டத்துறையின் பேராசிரியர் Ernest Bonaventure Ogbonnia Okonkwo அவர்களை, மேற்கூறிய திருஅவைத் தீர்ப்பாயத்தில் நீதியை ஊக்குவிப்பவராக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்