தேடுதல்

காங்கோ குடியரசு ஆயர்கள் காங்கோ குடியரசு ஆயர்கள் 

கிறிஸ்தவ வாழ்வின் மையம் நற்கருணை

ஜூன் 4 ஞாயிற்றுக்கிழமை முதல் 11 ஞாயிற்றுக்கிழமை வரை காங்கோ குடியரசின் Lubumbashi என்னுமிடத்தில் தேசிய நற்கருணை மாநாடு நடைபெறவுள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நற்கருணையின் மறைபொருள் திருவழிபாட்டு முறை மற்றும் முழு கிறிஸ்தவ வாழ்க்கையின் மையமாகும் என்றும், தூயஆவியானவரால் தொடர்ந்து வழிநடத்தப்படும் திருஅவை வாழ்வு மற்றும் நமது வாழ்வில் இறைவனின் அருள்பிரசன்னத்தைப் புரிந்து கொள்வதில் நற்கருணை நமக்கு உதவுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 4 ஞாயிற்றுக்கிழமை முதல் 11 ஞாயிற்றுக்கிழமை வரை காங்கோ குடியரசின் Lubumbashi என்னுமிடத்தில் நடைபெறவுள்ள தேசிய நற்கருணை மாநாட்டிற்கு, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்கருணையின் வழியாக கடவுளின் மறைக்கல்வியை வழங்குவதற்கும், வழிபாட்டு முறையின் அழகைக் கவனித்துக்கொள்வதற்கும், அதை முறையாகக் கொண்டாடுவதற்கும், கத்தோலிக்க நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும், நமது ஆற்றலின் ஆதாரமாகக் கடவுள் இருக்கிறார் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவர்கள், தங்களது மேய்ப்புப் பணியாளார்களுடன் இணைந்து, மிகவும் புனிதமான திருநற்கருணை மற்றும் கிறிஸ்தவ ஒற்றுமையின் பிணைப்பை நற்கருணை மாநாட்டின் வழியாக சிறப்பிக்கட்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்கள் அனைவரும் மக்களுடன் இணைந்து, கிறிஸ்துவின் திருஉடல் மற்றும் திருஇரத்தத்தின் உன்னதமான கொடையான தியாகத்திற்காக தமத்திரித்துவத்திற்கு பக்தியுடன் நன்றி செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நிலைவாழ்வின் அழியாமையுடன் இந்த பூமிக்குரிய வாழ்க்கையில் மனிதர்களாககக் கடவுளால் நாம் வளர்க்கப்படுகின்றோம் என்றும், கிறிஸ்தவர்களின் நம்பிக்கை, பணி ஆகியவற்றை நற்கருணையால் பலப்படுத்தவும் அதிகரிக்கவும் முயற்சிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2023, 13:52