தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (VATICAN MEDIA Divisione Foto)

பிறரின் மாண்பை கெடுப்பது புறங்கூறுதல் – திருத்தந்தை

தீயஆவியின் தூண்டுதலால் வரும் புறங்கூறுதலை தவிர்த்து அனைவரும் அன்புடன் நண்பர்களாக வாழவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

 

மெரினா ராஜ் – வத்திக்கான்

புறங்கூறுதல் என்பது மிகவும் கெடுதலானது என்றும் பிறரின் மாண்பை அழுக்காக்குவதற்கும் கெடுப்பதற்கும் பயன்படும் புறங்கூறுதல் தீய ஆவியிடம் இருந்து வருகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 20 சனிக்கிழமை ஜெனோவா உயர்மறைமாவட்டத்தை சார்ந்த உறுதிப்பூசுதல் திருவருளடையாளத் தயாரிப்புப் பெறும் சிறார் ஏறக்குறைய 1000 பேரை சாந்தா மார்த்தா இல்ல வளாகத்தில் சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அடுத்தவரைப் பற்றிப் பேசும் புறங்கூறுதல் மிகவும் கெடுதலானது என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடுத்தவரின் மாண்பை சிதைக்கப் பயன்படுத்தப்படும் புறங்கூறுதல் அதனை செய்பவரின் மாண்பினை அழிக்கின்றது என்றும் கூறினார்.

சிறார் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ்
சிறார் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ்

மேலும் தீய ஆவியின் தூண்டுதலால் வரும் புறங்கூறுதலை தவிர்த்து அனைவரும் அன்புடன் நண்பர்களாக வாழவேண்டும் என்றும், புறங்கூறுதலைத் தவிர்க்க  நாக்கினைக்  கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி

மனிதர்களாகிய நாம் அனைவரும் இப்பூமியின் துகள்கள் என்றும் விண்ணகத்திலிருந்து பொழியப்பட்ட கடவுளின் கனவுகளை உள்ளடக்கியத் துகள்கள் என்றும் டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றினை மே 20 சனிக்கிழமை பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்பூமியில் வாழும் மனிதர்களாகிய நாம் அனைவரும் விண்ணகத்திலிருந்து பொழியப்பட்ட கடவுளின் கனவுத்துகள்கள் என்றும்,  நாம் கடவுளின் நம்பிக்கை, பரிசு மற்றும் மகிமை என்றும் அக்குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2023, 13:11