தேடுதல்

காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை தவட்ரோஸ் அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை தவட்ரோஸ் அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தை மற்றும் முதுபெரும்தந்தை சந்திப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து திருத்தந்தை புனித ஆறாம் பவுல் மற்றும் முதுபெரும்தந்தை இரண்டாம் ஷெனௌடா ஆகியோரின் ஐம்பதாம் ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூர உள்ளார் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை தவட்ரோஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருத்தந்தை ஆறாம் பவுல் மற்றும் முதுபெரும்தந்தை மூன்றாம் ஷெனௌடா  சந்திப்பின் 50 ஆவது ஆண்டு விழா மே 10 புதன்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை தவட்ரோஸ் அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வி உரையில் பங்கேற்க இருக்கின்றார்.

அலெக்ஸாண்டிரியாவின் தேசத்தந்தையும், எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவையின் தலைவருமான முதுபெரும்தந்தை இரண்டாம் தவட்ரோஸ் அவர்கள், மே 9 ஆம் செவ்வாய்க்கிழமை ஆறு நாள் பயணமாக உரோம் வந்தடைந்த நிலையில் மே 10 புதன்கிழமை மற்றும் 11 வியாழன் ஆகிய நாள்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து அவர்களின் முன்னோடிகளான திருத்தந்தை புனித ஆறாம் பவுல் மற்றும் முதுபெரும்தந்தை இரண்டாம் ஷெனௌடா ஆகியோரின் ஐம்பதாம் ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூர உள்ளார்.

மே 10 புதன்கிழமை பொதுமறைக்கல்வி உரையில் பங்கேற்கும் முதுபெரும்தந்தை தவட்ரோஸ் அவர்கள், மே 11 வியாழன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தனியாக சந்தித்து சிறிது நேர செபத்திலும், அதன்பின்னர், கிறிஸ்தவ ஒன்றிப்பு மேம்பாட்டிற்கான திருப்பீடத் துறையிலும் நேரத்தை செலவழிப்பார்.

அதன் பின் உரோமில் வசிக்கும் காப்டிக் மக்களையும் சந்திக்கும் முதுபெரும்தந்தை தவட்ரோஸ் அவர்கள் மே 14 ஞாயிற்றுக்கிழமை அன்று காப்டிக் நம்பிக்கையாளார்களுக்காக நடத்தப்பெறும் திருநற்கருணை வழிபாட்டிற்குத் தலைமை தாங்குவார்.

முதுபெரும்தந்தையுடன் திருத்தந்தை
முதுபெரும்தந்தையுடன் திருத்தந்தை

திருத்தந்தை மற்றும் முதுபெரும்தந்தையின் சந்திப்பு கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணத்தின் ஒரு மைல்கல் என்றும், வத்திக்கானின் முதல் மூன்று கவுன்சில்களை அங்கீகரிக்கும் மற்ற கிழக்கு மரபுவழி தலத்திருஅவைகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களுக்கு ஒரு முன்மாதிரியான செயல்பாடு என்றும் கூறியுள்ளார் அருள்பணி ஹைசிந்தே டெஸ்டிவெல்லே.  

கடந்த ஏப்ரலில் வத்திக்கான் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ள கிறிஸ்தவ ஒன்றிப்புத்துறையின் தலைவர் அருள்பணி ஹைசிந்தே டெஸ்டிவெல்லே அவர்கள் 1973ஆம் ஆண்டு மே 10 நாள் நடைபெற்ற திருத்தந்தை புனித ஆறாம் பவுல் மற்றும் முதுபெரும்தந்தை ஷெனௌடா ஆகியோர் சந்தித்துக் கையெழுத்திட்ட கூட்டுப் பிரகடனத்தையும் நினைவுகூர்ந்தார். மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் முதுபெரும்தந்தை இரண்டாம் தவட்ரோஸ் அவர்கள் முதன் முதலாக சந்தித்த 10ஆம் ஆண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில், கிறிஸ்தவ ஒன்றிப்பு மேம்பாட்டுத்துறையானது கத்தோலிக்க திருஅவை மற்றும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவை என்ற தலைப்பில் ஒரு நினைவுப் புத்தகத்தை வெளியிடுகிறது. திருத்தந்தை புனித ஆறாம் பவுல், மற்றும் முதுபெரும்தந்தை மூன்றாம் ஷெனௌடா (1973-2023) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் 50வது ஆண்டுவிழா”. இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு கத்தோலிக்க திருஅவைக்கும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவைக்கும் இடையிலான நல்லுறவுக்கு சாட்சியமளிக்கும் முக்கிய ஆவணங்களை இந்த புத்தகம் எடுத்துரைக்கின்றது.

வத்திக்கான் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட உள்ள இப்புத்தகமானது கிறிஸ்தவ  ஒன்றிப்பு மேம்பாட்டுத்துறையின் புதிய தொடரான Ut Unum Sint" என்பதின் மூன்றாவது தொகுதியாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 மே 2023, 13:50