தேடுதல்

பாத்திமா அன்னை - போர்த்துக்கல் பாத்திமா அன்னை - போர்த்துக்கல்  (AFP or licensors)

ஆகஸ்ட் 5ஆம் தேதி பாத்திமா திருத்தலத்தில் திருத்தந்தை

போர்த்துக்கல்லின் லிஸ்பனில் ஆகஸ்ட் மாதம் முதல் தேதி முதல் ஆறாம் தேதிவரை இடம்பெறவிருக்கும் உலக இளையோர் கூட்டத்தில் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதிவரை திருத்தந்தை பிரான்சிஸ் பங்கேற்கிறார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

போர்த்துக்கல்லின் லிஸ்பனில் ஆகஸ்ட் மாதம் முதல் தேதி முதல் ஆறாம் தேதிவரை இடம்பெறவிருக்கும் உலக இளையோர் கூட்டத்தில் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதிவரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்வது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை உலக இளையோர் தினக்கொண்டாட்டங்களை முன்னிட்டு போர்த்துக்கல்லில் இருக்கும் திருத்தந்தை, 5ஆம் தேதியன்று பாத்திமா நகரின் மரியன்னை திருத்தலத்தைச் சென்று தரிசிக்க உள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு பானமா நகரில் இடம்பெற்ற உலக இளையோர் தின இறுதி நாளின்போது, அடுத்த உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் 2022ஆம் ஆண்டு 2ஆம் தேதிமுதல் 7ஆம் தேதிவரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கோவிட் பெருந்தொற்றை முன்னிட்டு இது 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் இடம்பெறும் என 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 May 2023, 14:18