உயிர்ப்பு செய்திக்கு மாறாக மரணத்தை விதைக்கும் போர்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை ஏப்ரல் 16 இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கும் உக்ரைன் நாட்டின் ஆர்த்தடாக்ஸ் மற்றும், கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்ப்பு செய்திக்கு மாறாக போர்கள் மரணத்தை விதைக்கின்றன என்றும் கூறினார்
ஏப்ரல் 16 ஞாயிறன்று தூய வத்திக்கான் பேதுரு வளாகத்தில் அல்லேலுயா வாழ்த்தொலிக்குப் பின் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது எண்ணங்களை இரஷ்யர்கள் மற்றும் உக்ரைனியர்களிடம் திருப்பி, அமைதியின் இறைவன் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று செபித்தார்.
உயிர்ப்பு செய்திக்கு முற்றிலும் மாறாக, போர்கள் தொடர்கின்றன என்றும், கொடூரமான வழிகளில் மரணத்தை விதைத்து வருகின்றன என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த கொடிய செயல்களுக்காக வருந்துவோம், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக செபிப்போம் என்றும் கேட்டுக் கொண்டார்.
மனித வன்முறையால் ஏற்படும் கொடூர மரணத்தை உலகம் இனி அனுபவிக்கக்கூடாது, மாறாக இறைவன் தனது அருளால் புதுப்பித்தளிக்கும் வாழ்க்கையின் அற்புதத்தை அனுபவிக்க கடவுளிடம் தொடர்ந்து வேண்டுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2022 பிப்ரவரி 24 அன்று இரஷ்ய இராணுவம் அதன் அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து அதாவது போர் தொடங்கி 417வது நாள் கடந்த நிலையில் கிழக்கத்திய பகுதிகளான Bakhmut, Komyshuvakha, மற்றும் Sloviansk இடங்களில் அதிக மக்கள் மரணமடைந்தும் காயமடைந்தும் உள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்