சகோதரத்துவ அன்பு பிறக்குமிடம் சிலுவை
மெரினா ராஜ் – வத்திக்கான்
சிலுவையிலிருந்து சகோதரத்துவ அன்பு மீண்டும் பிறப்பெடுக்கின்றது என்றும், கடவுளின் மன்னிப்பு நம்மேல் பொழியப்படுகின்றது என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தியினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 4 செவ்வாய்க்கிழமை ஹேஸ்டாக் புனித வாரம் என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள திருத்தந்தையின் குறுஞ்செய்தியானது புனித வாரத்தின் சிறப்பான மன்னிப்பையும் சகோதரத்துவ அன்பையும் வலியுறுத்துகின்றது.
சிலுவையிலிருந்து மன்னிப்புப் பொழியப்படுகின்றது, சகோதரத்துவ அன்பு மீண்டும் பிறப்பெடுக்கின்றது. சிலுவையினால் நாம் அனைவரும் உடன்பிறந்த சகோதரர் சகோதரிகளாகின்றோம் என்பதே திருத்தந்தையின் அக்குறுஞ்செய்தி உணர்த்தும் செய்தியாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்