நாம் அனைவரும் ஒரே தந்தையின் அன்புப் பிள்ளைகள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதைக் கண்டறியும் நேரத்தில் ஒரே தந்தையின் அன்புப் பிள்ளைகளாக சகோதரர் சகோதரிகளாக நம்மை நாம் கண்டறிகிறோம் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 25, செவ்வாய்க்கிழமை, பயணிக்கும் சமூகமாக நாம் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வாறு குறுஞ்செய்தியினைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யாரும் இறைவனிடம் தனியாகச் செல்வதில்லை என்பதனையும் எடுத்துரைத்துள்ளார்.
நாம் அனைவரும் சகோதரர் சகோதரிகள், ஒரே தந்தையின் பிள்ளைகள் என்று கண்டறியும் தருணத்தில் நாம் கடவுளின் குழந்தைகளாக இருப்பதைக் காண்கிறோம். யாரும் இறைவனிடம் தனியாகச் செல்வதில்லை இணைந்தே செல்கின்றோம். அதனால் தான் பயணம் செய்யும் சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பது அவசியம் என்றும் அக்குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்