சான்றுபகர்தல் வழியாகவே நம்பிக்கை வளர்கிறது : திருத்தந்தை
நம்பிக்கையானது வாழ்க்கையின் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது: திருத்தந்தை பிரான்சிஸ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நற்செய்தியின் சுடரையும், மீட்பர் இயேசுவினுடைய அன்பின் மகிழ்ச்சியையும், அவருடைய வாக்குறுதியின் நம்பிக்கையையும் கொண்டு வந்த சான்றுகள் வழியாக, நம்பிக்கையானது வாழ்க்கையின் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 27, இப்புதனன்று வெளியிட்டுள்ள தனது குறுஞ்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சான்று பகிர்தல் வழியாகவே நம்பிக்கை வளர்த்தெடுக்கப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
27 April 2023, 13:38