கடவுளின் பரிவிரக்கம் நம்மை எப்போதும் பாதுகாக்கிறது : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம்
நமது காயங்கள் இறைவனின் காயங்களை வெளிப்படுத்தும் பத்திகளாக, திறப்புகளாக இருக்கலாம். ஆனால்,அவை இறைவனின் காயங்களைப் பின்பற்றி, கடவுளின் பரிவிரக்கம் உள்ளே நுழைய அனுமதிக்கும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஏப்ரல் 13, இவ்வியாழன்று வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளுடைய அருள் நம் வாழ்க்கையை மாற்றி, அமைதி மற்றும் ஒப்புரவின் கைவினைஞர்களாக உருவாக்குகிறது என்றும் கூறியுள்ளார்.
ஏப்ரல் 12, இப்புதனன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் தான் வழங்கிய புதன் பொதுமறைக்கல்வி உரைக்குப் பின்பு திருப்பயணிகளிடம், கடவுளின் இரக்கம் எப்போதும் நம்மை வரவேற்கிறது, நமக்குத் துணையாகச் செல்கிறது, அது நம்மை ஒருபோதும் விட்டுவிடாது என்று கூறியதும், இன்று, உலகம் போர்களாலும், கடவுளை விட்டு விலகியதாலும் அதிகமாக சோதிக்கப்படுவதால், நமக்கு இறைத்தந்தையின் இரக்கம் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது என்று வலியுறுத்திக் கூறியதும் இங்கே நினைவு கூரத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்