திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

'அவனியில் அமைதி' திருமடலை அனைவரும் படிப்போம்: திருத்தந்தை

திட்டங்களையும் முடிவுகளையும் ஊக்குவிக்க நாடுகளின் தலைவர்கள் அனுமதிக்க வேண்டும் :திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உயிர்த்த கிறிஸ்துவின் மகிழ்ச்சியால் நிரம்பிய சகோதரர் சகோதரிகளே, நாம் ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையாக வாழ்வதற்கான அருளை ஆண்டவரிடத்தில் கேட்போம் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 12, இப்புதனன்று, தான் வெளியிட்ட குறுஞ்செய்திகளில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதர்களின் குழுமம் முன்முயற்சி எடுத்து அமைதி மற்றும் இரக்கத்தின் நற்செய்தியை அறிவிக்க உறுதிகொண்டது என்றும் தெரிவித்தார்

திருத்தந்தை புனித 23-ஆம் யோவான் அவர்கள், ‘அவனியில் அமைதி’ என்ற திருமடலை வெளியிட்டதன் 60-ஆம் ஆண்டு நிறைவுறும்வேளை, முன்னெப்போதையும் விட இத்திருமடல் இக்காலத்திற்கு மிகவும் பொருத்தமுடையதாக உள்ளதால், இதனை அனைவரையும் படிக்க அழைப்பதாகவும், இதன் அடிப்படையில், திட்டங்களையும் முடிவுகளையும் ஊக்குவிக்க நாடுகளின் தலைவர்கள் அனுமதிக்க வேண்டும் என்று தான் இறைவேண்டல் செய்வதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 April 2023, 14:09