உயிர்த்த ஆண்டவர் என்றென்றும் நம்முடன் இருக்கிறார் : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்ககம் - வத்திக்கான்
நாம் மீண்டும் எழுந்து புதிதாக ஒரு பயணத்தைத் தொடங்க வேண்டுமாயின், நாம் கலிலேய அனுபவத்துக்குத் திரும்பவேண்டும், அதாவது, அவருடனான நமது முதல் சந்திப்பின் உயிருள்ள, உறுதியான மற்றும் தெளிவான நினைவுக்குத் திரும்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 9, இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு விண்ணப்பித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிர்த்த ஆண்டவர் இயேசு, என்றென்றும் நம்முடன் இருக்கிறார். இதனால் திருஅவையும் உலகமும் மகிழ்ச்சியில் திளைக்கட்டும் என்றும், ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழாவான இன்று, இருளையும் ஒளிரச் செய்யும் ஒளியில், நம் உலகம் அடிக்கடி சூழ்ந்திருப்பதைக் கண்டு வியப்பை அனுபவிக்க நம்மையே நாம் அனுமதிப்போம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்