தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

இடுக்கமான வழியில் பயணிப்போம் : திருத்தந்தை

போரை அனுபவிக்கும் அனைத்து மக்களுக்கும் கடவுளின் உதவியால், அமைதியின் பாதைகள் திறக்கப்பட வேண்டும் என நாம் அனைவரும் ஒன்றிணைந்து மன்றாடுவோம் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் . வத்திக்கான்

கடவுள் நம் மனித வரலாற்றில் நுழைய மிகவும் இடுக்கமான வழியைத் தேர்ந்தெடுத்தார் என்றும் இந்த இடுக்கமான வழியாகிய சிலுவை வழியில் அவர் வெற்றிகண்டார் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இடுக்கமான வழியில் பயணிப்போம்

ஏப்ரல் 3, இத்திங்களன்று, இரண்டு டுவிட்டர் குறுஞ்செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், முதல் குறுஞ்செய்தியில் இயேசுவைபோல சிலுவை என்னும் இடுக்கமான வழியை தேர்ந்துகொள்வோர் யாரும் அவநம்பிக்கையுடன் இருக்க முடியாது என்றும், வேதனை மற்றும் கைவிடப்பட்ட நிலையிலும் நாம் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத நிலைக்குக் கடவுள் உயர்ந்தார் என்றும் கூறியுள்ளார்.

உக்ரைன் மக்களுக்காக செபிப்போம்.

புனித வாரத்தின் இந்த நாள்களில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்காகவும், போரை அனுபவிக்கும் அனைத்து மக்களுக்காகவும், கடவுளின் உதவியால், அமைதியின் பாதைகள் திறக்கப்பட வேண்டும் என நாம் அனைவரும் ஒன்றிணைந்து மன்றாடுவோம் என்றும் தனது இரண்டாவது டுவிட்டர் குறுஞ்செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2023, 14:58