தேடுதல்

தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனர்களுடன் திருத்தந்தை தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனர்களுடன் திருத்தந்தை   (VATICAN MEDIA Divisione Foto)

கண்ணியமான பணிக்கு ஆம் என்று சொல்லுவோம் திருத்தந்தை

வளங்களை முறையாகப் பயன்படுத்திய பழைய ஏற்பாட்டில் வரும் யோசேப்பின் வாழ்வை எடுத்துக்காட்டாகக் கொண்டு வாழுங்கள் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உடன்பிறந்த உறவின் அடைப்படையில் வழிநடத்தப்பட்டு, பருவங்களை ஆய்ந்தறிந்து, வளங்களை வீணாக்காத, எதிர்கால சந்ததியினரை இக்கட்டான நிலையில் விட்டுவிடாத அரசியல்வாதிகளே இன்று நமக்குத் தேவை என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 3, இத்திங்களன்று,  இத்தாலியில் உள்ள தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பழைய ஏற்பாட்டில் வரும் யோசேப்பின் வாழ்வை எடுத்துக்காட்டாகக் கொண்டு தனது சிந்தனைகளை அவர்களுடன்  பகிர்ந்துகொண்டார்.

தொழிலாளர்களுக்கிடையேயான ஒற்றுமைப் பிணைப்பின் கொள்கையைப் பகிர்ந்து கொள்ளும் இலட்சக் கணக்கான மக்களின் அன்றாட பணிகள் வழியாகப் பொதுநன்மைப் பகிர்ந்துகொள்ளப்படுகிறது என்று தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்று விதமான வேண்டுகோள்களை முன்வைத்து தனது உரையைத் தொடர்ந்தார்.

அறிவிக்கப்படாத பணிகள்

முதலாவதாக, அறிவிக்கப்படாத பணிகள் வேண்டாம். காரணம், இது தனிநபருக்கு பொருளாதார நன்மைகளைத் தருவதாகத் தெரிகிறது என்றும், மேலும், இது தொலைதூரத்தில் குடும்பங்கள் பங்களிக்க மற்றும் ஓய்வூதிய முறையை நியாயமான முறையில் அணுக அனுமதிக்கவில்லை என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அறிவிக்கப்படாத பணிகள் தொழிலாளர் சந்தையை சிதைத்து, தொழிலாளர்களை சுரண்டல் மற்றும் அநீதிக்கு ஆளாக்குகிறது என்றும் கவலை தெரிவித்தார்.

முறைகேடான பணிக்கள்

இரண்டாவதாக, முறைகேடான பணிக்களுக்கு முடியாது என்று சொல்வோம். ஏனென்றால், இது இளைஞர்களின் வாழ்க்கைத் தேர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் சில சமயங்களில், அவர்களை வேலை செய்யும்படி கட்டாயப்படுத்துகிறது என்றும், அவநம்பியகையை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தேர்வுகளைத் தள்ளிப்போடுவதை ஊக்குவிக்கிறது என்றும், எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

கண்ணியமான பணிகள்

மூன்றாவதாக, கண்ணியமான பணிக்கு ஆம் என்று சொல்லுவோம். நலன் என்பது ஒருவரின் சொந்த மற்றும் பிறரின் நலனில் பங்கேற்பதற்கான ஒரு வடிவம் என்றும், பொருளாதார வளங்களை ஒதுக்கி வைப்பதும், சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகுமுறைகளை உத்தரவாதப்படுத்துவதும் வாழ்க்கையின் வெவ்வேறு பருவங்களை ஒன்றாக வைத்திருக்கக்கூடிய விலைமதிப்பற்ற சொத்துகளாகும் என்றும் தெளிவுபடுத்தினார் திருத்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2023, 14:49