தேடுதல்

மொசாம்பிக்கின் தூதுவர் Raúl Manuel Domingos அவர்களிடமிருந்து பதவி நியமன நம்பிக்கைச் சான்றிதழைப் பெறும் திருத்தந்தை மொசாம்பிக்கின் தூதுவர் Raúl Manuel Domingos அவர்களிடமிருந்து பதவி நியமன நம்பிக்கைச் சான்றிதழைப் பெறும் திருத்தந்தை   (Vatican Media)

தவக்காலத்தின் உண்ணா நோன்பு, ஏழைகளுக்கு உதவி மற்றும் செபம்

உண்ணாநோன்பும், ஏழைகளுக்குப் பொருளுதவியும், செபமும் நம் வாழ்வில் உண்மையான விசுவாசம், உயிரூட்டமுடைய நம்பிக்கை மற்றும் செயல்பாடுடைய பிறரன்பு வேரூன்ற உதவுகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இத்தவக்காலத்தில் உண்மையான விசுவாசம், உயிர்ரூட்டமுடைய நம்பிக்கை, செயல்பாடுடைய பிறரன்பு ஆகியவைகளை நமக்குள் வேரூன்ற உதவும் கூறுகள் குறித்து மார்ச் ஆறாம் தேதி திங்கள்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தவக்காலம் என்ற ஹேஷ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, ஏழ்மையும் தன்னையே மறுக்கும் உண்ணாநோன்பும், காயப்பட்ட மனிதகுலத்திற்கு அக்கறையுடன் ஆற்றும் அன்பின் நடவடிக்கையான பொருளுதவியும், இறைத்தந்தையோடு உரையாடும் செபமும் நம் வாழ்வில் உண்மையான விசுவாசம், உயிரூட்டமுடைய நம்பிக்கை மற்றும் செயல்பாடுடைய பிறரன்பு வேரூன்ற உதவுகின்றன என கூறியுள்ளார்.

மேலும், இதே மார்ச் 6, திங்கள்கிழமையன்று, திருப்பீடத்திற்கான மொசாம்பிக்கின் தூதுவர் Raúl Manuel Domingos அவர்களிடமிருந்து பதவி நியமன நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டு, அவர் நியமனத்தை அங்கீகரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2023, 14:29