உள்மனத்தெளிவைப் பயிற்சிக்கும் காலம் தவக்காலம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
தவக்காலம் உள்மனத்தெளிவைப் பயிற்சிக்கும் காலம் என்றும், அலகைக்கு எதிரான போராட்டத்தை விடுத்து உள்மன சுதந்திரத்திற்கான ஒரு போராட்டம் நமக்குள் நடைபெற வழிவகுக்கும் காலம் என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 7 செவ்வாய்க்கிழமை # தவக்காலம், இறைவார்த்தை, செபம் என்று வலியுறுத்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமைக்கு எதிரான அலகையின் போராட்டத்தில் இருந்து விடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உள்மனத்தெளிவை பயிற்சிக்கும் இத்தவக்காலத்தில், இறைவார்த்தை செபத்தில் நம்மை நிலைநிறுத்துவதன் வழியாக, அடிமைப்படுத்தும் அலகைக்கு எதிரான போராட்டத்தில் இருந்து விடுபட்டு, உள்மன சுதந்திரத்திரத்திற்கான போராட்டம் நமக்குள் நடைபெற சாதகமான வாய்ப்பு உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்