தேடுதல்

ஆன்ம உணவாம் நற்கருணை ஆன்ம உணவாம் நற்கருணை 

ஆன்மாவை சீராக்கும் உண்ணாநோன்பு – திருத்தந்தை

வாழ்க்கை என்பது விரைவாக நகர்ந்து கொண்டிருக்கும் நிகழ்கால உலகின் நிலப்பரப்பின் மேல் உருவாக்கப்படக் கூடாது

மெரினா ராஜ் – வத்திக்கான்

உண்ணா நோன்பு நமது ஆன்மாவை சீராக வைத்திருக்க உதவுகிறது என்றும், அது நம்மை அவற்றின் உண்மையான மதிப்புக்காகப் பாராட்ட வைக்கிறது என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 10 வெள்ளிக்கிழமை ஹேஸ்டாக் தவக்காலம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட திருத்தந்தையின் குறுஞ்செய்தியானது உண்ணா நோன்பு பற்றி வலியுறுத்துகின்றது.

வாழ்க்கை என்பது விரைவாக நகர்ந்து கொண்டிருக்கும் நிகழ்கால உலகின் நிலப்பரப்பின் மேல் உருவாக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது ஆன்மாவை சீராக வைத்திருக்கவும் அதன் உண்மையான மதிப்பிற்காக நம்மைப் பாராட்டவைக்கவும் தவக்காலத்தில் நாம் கடைபிடிக்கும் உண்ணா நோன்பு உதவுகின்றது என்றும் அக்குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 March 2023, 13:07