தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (VATICAN MEDIA Divisione Foto)

கொடுத்தலே உயர்ந்த கொடை : திருத்தந்தை பிரான்சிஸ்

பெறுவதை விட கொடுப்பதில்தான் நம் இதயங்கள் அதிக மகிழ்ச்சியைக் காண்கின்றன : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்ககம் - வத்திக்கான்

தர்மம் செய்வது என்பது, இதயத்திற்கு அமைதியையும் நம்பிக்கையும் கொடுக்கிறது என்று தான் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி ஒன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 9, இவ்வியாழனன்று, வெளியிட்ட டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். தர்மம் செய்வது என்பது  கொடுப்பதன் அழகை நமக்கு வெளிப்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

“இவ்வாறு பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்க வேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன். அதோடு, பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவு கூருங்கள் என்றும் கூறினேன்” (திப 20:35) என்று திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து 'கொடுத்தல்' பற்றி எடுக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,

மேலும், கொடுத்தல் என்பது ஒரு விலைமதிப்பற்ற இரகசியத்தைக் கண்டறிய உதவுகிறது என்றும், பெறுவதை விட கொடுப்பதில்தான் நம் இதயங்கள் அதிக மகிழ்ச்சியைக் காண்கின்றன என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2023, 14:28