தேடுதல்

POPE-INTERVIEW/ POPE-INTERVIEW/ 

ஒவ்வொரு மனிதனும் அவனுக்குரிய உரிமைகள் மீறப்படமுடியாதவன்

ஒரு சமுதாயத்திற்கு வருங்காலம் உள்ளது என்பது உறுதிசெய்யப்பட வேண்டுமெனில், மனிதர்களின் மாண்பை மதிக்கும் மனநிலை வளர்க்கப்பட வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஒவ்வொரு மனிதனும் புனிதமானவன், மற்றும் உரிமைகள் மீறப்படமுடியாதவன் என்ற கருத்தை வலியுறுத்தி மார்ச் 21, செவ்வாய்க்கிழமை டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு மனிதனும் புனிதமானவன் மற்றும் உரிமைகள் மீறப்படமுடியாதவன் மற்றும், ஒரு சமுதாயத்திற்கு வருங்காலம் என்பது உள்ளது என்பது உறுதிசெய்யப்பட வேண்டுமெனில், மனிதர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களின் மாண்பை மதிக்கும் மனநிலை வளர்க்கப்பட்டு முதிர்ச்சி அடைய வேண்டியது அவசியம், என தன் செவ்வாய்க்கிழமை டுவிட்டரில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்கப்பட்ட திருத்தந்தையர்க்குரிய டுவிட்டர் பக்கத்தில் இதுவரை 3590 டுவிட்டர் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி பக்கத்தை இதுவரை 53 இலட்சம் பேர் பின்பற்றியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 March 2023, 13:27