திருப்பீட நற்செய்தி அறிவிப்புத் துறைக்குப் புதிய செயலர்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
முதல் நற்செய்தி அறிவிப்பு மற்றும் புதிய குறிப்பிட்ட தலத்திருஅவைகளுக்கான பிரிவின் ஒரு பகுதியாக, நைஜீரிய பேராயர் Fortunatus Nwachukwu அவர்களை, திருப்பீட நற்செய்தி அறிவிப்புத் துறையின் புதிய செயலாளராகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளதாக, மார்ச் 15, இப்புதனன்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
Acquaviva பேராயர் Nwachukwu, 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி முதல் திருப்பீடத்தின் நிரந்தர பார்வையாளராக ஐக்கிய நாடுகள் மற்றும் ஜெனீவாவில் உள்ள சிறப்பு நிறுவனங்களுக்கும் உலக வர்த்தக அமைப்புக்கும் பணியாற்றினார்.
1960-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி பிறந்த பேராயர் Nwachukwu அவர்கள், நைஜீரியாவிலுள்ள Umuahia மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக 1984-ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி அருள்பொழிவு செய்யப்பட்டார். பின்னர் 1990-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி Aba மறைமாவட்டத்தின் பணியாளராக (incardinated) இணைந்தார்.
2012-ஆம் ஆண்டில், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், அவரை நிக்கராகுவாவின் திருப்பீடத் தூதரக நியமித்ததுடன் அவரை Acquaviva-வின் பேராயராகவும் உயர்த்தினார். பின்னர் 2017-ஆம் ஆண்டு முதல் Trinidad and Tobago, Barbados, Dominica, Jamaica, புனித Kitts மற்றும் Nevis, புனித Vincent and Grenadines, மற்றும் Guyana ஆகியவற்றின் திருப்பீடத் தூதராகப் பணியாற்றினார்.
பேராயர் Nwachukwu 2018-ஆம் ஆண்டில் புனித Lucia, Grenada, Bahamas, Suriname ஆகிய இடங்களுக்குத் திருப்பீடத் தூதராகப் பணியாற்றினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்