தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

திருஅவை ஒரு சிலருக்கான வீடல்ல, அனைவருக்குமான வீடு

இத்தாலிய சுவிஸ் வானொலி மற்றும் தொலைக்காட்சிக்கு தனது பத்து ஆண்டுகால தலைமைத்துவ பணி நிறைவிற்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளித்துள்ள நேர்காணலானது, மார்ச் 12, ஞாயிற்றுக்கிழமை மாலை www.rsi.ch என்ற வலைதளத்தில் ஒளிபரப்பப்பட இருக்கின்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருஅவை சிலருக்கு மட்டுமான வீடல்ல மாறாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடவுளின் உண்மையுள்ள மக்கள் அனைவருக்குமான வீடு என்றும், சோர்வு, விஷயங்களைத் தெளிவாகப் பார்க்க முடியாத தெளிவின்மை போன்றவை, சூழ்நிலைகளை எவ்வாறு மதிப்பிடுவது என்பதை அறியாதவை என்றும் நேர்காணல் ஒன்றிற்கு பதிலளித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் உள்ள சாந்தா மார்த்தா இல்லத்தில் இத்தாலிய சுவிஸ் வானொலி மற்றும் தொலைக்காட்சிக்கு தனது பத்து ஆண்டுகால தலைமைத்துவ பணி நிறைவிற்காக  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளித்துள்ள நேர்காணலானது, மார்ச் 12, ஞாயிற்றுக்கிழமை மாலை www.rsi.ch என்ற வலைதளத்தில் ஒளிபரப்பப்பட இருக்கின்ற நிலையில் அந்த நேர்காணலின் சுருக்கத்தை திருப்பீடம் வெளியிட்டுள்ளது.

சோர்வு, விஷயங்களைத் தெளிவாகப் பார்க்க முடியாத தெளிவின்மை, போன்றவை சூழ்நிலைகளை எவ்வாறு மதிப்பிடுவது என்பதை அறியாதவை என்றும், அர்ஜெண்டினாவில் உள்ள போனஸ் ஐரெஸில் தான் வாழ்ந்த வாழ்க்கை, ஆற்றிய பணிகள் மறக்க முடியாத நினைவுகள் என்றும் நேர்காணலில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனித்துவமான உரோம் நகரில், கவலைகளுக்கு பஞ்சமில்லை என்றாலும், தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதை உறுதியாக எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகப் போர் காலகட்டத்தில் இருக்கும் நாம் நாடுகள் துண்டு துண்டாக மாறுவதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

உலகம் முழுவதிலும் பாதிப்பு  இல்லை என்று யாராலும் சொல்ல முடியாத அளவிற்கு, பெரும் சக்திகளாக போர்கள் உருவெடுத்து பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன என்றும், இரஷ்ய அரசுத்தலைவர் புடின் தன்னை சந்திக்க விரும்புவதை தான் அறிந்துள்ளதாகவும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரவேற்பு கலாச்சாரத்தை வளர்ப்பதன் அவசியம், உக்ரைனில் போர் மற்றும் பிற மோதல்கள், தலைமைத்துவப் பணியின் பத்தாண்டு ஆகியவை  குறித்தும் கூறியுள்ளார்.

உடல்நிலை, தலைமைத்துவப்பணி குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்கள், முழங்கால் வலி இப்போது குணமாகிவருவதாகவும், நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், ஒதுக்கப்பட்ட ஏழைமக்களை விருந்துக்கு அழைத்த இயேசுவின் உவமை மாந்தர் போல திருஅவை அனைவருக்குமான வீடு என்பதை தன் செயல்களால் வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.  

பாவம் எப்போதும் இருக்கிறது என்றும், மற்றவர்களை விட நேர்மையானவர்களாகத் தன்னை உணரும் அனைவரும் பாவிகள் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லத்தின் தங்குமிடம், கோவிட் தொற்று நோயின் தாக்கம், உள்ளிருப்பு, அர்ஜெண்டினா பணி, ஐரோப்பா கண்டத்தின் அரசியல் அமைப்பு, இளையோர் உரையாடல், திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட், உலகப் போர் போன்ற பல கருத்துக்களையும் பகிர்ந்துள்ளார்.   

இத்தாலிய சுவிஸ் வானொலி மற்றும் தொலைக்காட்சிக்காக நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் உடனான நேர்காணலின் பகுதிகள், திருத்தந்தையின் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. வரவேற்பு கலாச்சாரத்தை வளர்ப்பதன் அவசியம், உக்ரைனில் போர் மற்றும் பிற மோதல்கள், அவரது முன்னோடியுடன் உறவுகள், பிற்பட்ட வாழ்க்கை ஆகியவை உரையாற்றப்பட்ட தலைப்புகளில் அடங்கும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 March 2023, 12:55