இறுதிச்சடங்குத்திருப்பலியில் வைக்கப்பட்டிருந்த ஆயர் David O Connell புகைப்படம் இறுதிச்சடங்குத்திருப்பலியில் வைக்கப்பட்டிருந்த ஆயர் David O Connell புகைப்படம்  (2023 Getty Images)

ஆயர் டேவிட் ஓ'கானலின் மறைவிற்கு திருத்தந்தை இரங்கல்

பிப்ரவரி 18 ஞாயிறு இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் துணை ஆயர் டேவிட் ஓ கானல் அவர்களின் இறுசிசடங்கு திருப்பலி மார்ச் 3 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் துணைஆயர் டேவிட் ஓ'கானலின் (O’Connell) மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும், மக்களுக்கு நெருக்கமான ஒரு அருள்பணியாளராக பணியாற்றிய அவரது சாட்சியமுள்ள வாழ்வைப் பாராட்டியும் இரங்கல் செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 18 ஞாயிறன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் துணைஆயர் டேவிட் ஓ கானல் அவர்களின் இறுசிசடங்கு திருப்பலி மார்ச் 3 வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேளை தன் இரங்கல் தந்தியினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களின் கையெழுத்திடப்பட்டு திருத்தந்தை சார்பாக அனுப்பப்பட்ட தந்தியில், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தலத்திருஅவைக்கு ஆயர் ஓ'கானல் ஆற்றிய அர்ப்பணிப்புள்ள பணிக்கு நன்றியினையும், குறிப்பாக ஏழைகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் தேவைப்படுபவர்கள் மீதான அவரது ஆழ்ந்த அக்கறை, புனிதம் மற்றும் கண்ணியத்தை நிலைநிறுத்துவதற்கான அவரது முயற்சிகளையும் நினைவுகூர்ந்து எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"துணை ஆயர் டேவிட் ஓ'கானலின் திடீர்மரணம் குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைமாவட்டத்தின் அருள்பணியாளர்கள், துறவறத்தார் பொது நிலையினர் ஆகிய அனைவருக்கும் இதயப்பூர்வமான இரங்கலையும், ஆன்மீக நெருக்கத்தையும்  அத்தந்தி வழியாக தெரிவித்துள்ளார்.

பிஷப் ஓ'கானலின் பணிக்கு நன்றி

மேலும் வாழ்க்கை என்னும் கடவுளின் பரிசின் வழியாக, உள்ளூர் சமூகத்தில் ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் அமைதியை வளர்ப்பதற்கான ஆர்வம் கொண்ட ஆயரின் நினைவைப் போற்றும் அனைவரும், வன்முறையின் வழிகளை நிராகரித்து தீமையை நன்மையால் வெல்லும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும் அத்தந்தியில் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 March 2023, 12:33