தேடுதல்

நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடத் துறை உரோம் நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடத் துறை உரோம்  (Vatican Media)

புதிய அப்போஸ்தலிக்க சட்டவிதிமுறைகளில் மாற்றங்கள்

மறைப்பணி செயல்பாடுகளின் மேலாண்மை தொடர்பான பணிகள் மற்றும் பணிகளுக்காக விதிக்கப்பட்ட சொத்துக்களுக்கான நிர்வாகம் ஆகியவற்றிற்காக இரு செயலர்கள் பணியாற்றுவார்கள்

மெரினா ராஜ் – வத்திக்கான்

Praedicate Evangelium என்னும் புதிய அப்போஸ்தலிக்க சட்டவிதிமுறைகளின்படி நற்செய்தி அறிவிப்புப் பேராயத்திற்குக் கீழ் இரண்டு பொறுப்புக்களில் பணிபுரிய செயலர்களை பணியமர்த்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

மார்ச் 17 வெள்ளிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வெளியிடப்பட்ட இம்மாற்றங்கள், புதிதாக உருவாக்கப்பட்ட நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தைச் சார்ந்த மறைப்பணி செயல்பாடுகளின் மேலாண்மை தொடர்பான பணிகள் மற்றும் பணிகளுக்காக விதிக்கப்பட்ட சொத்துக்களுக்கான நிர்வாகம் ஆகியவற்றிற்காக இரு செயலர்கள் பணியாற்றுவார்கள் என்பதை எடுத்துரைக்கின்றது.

மறைப்பணி ஒத்துழைப்பிற்காக விதிக்கப்பட்ட பொருளாதார நிதிகளை நிர்வகிப்பதற்கும் அவற்றின் சமமான பகிர்விற்கும் பொறுப்பாக திருப்பீடத்தின் மறைப்பணி இயக்கங்களின் தலைவராக ஒருவரும், மறைப்பணிகளுக்காக விதிக்கப்பட்ட சொத்துக்களின் நிர்வாகத்திற்கு பொறுப்பான சிறப்பு அலுவலகத்தின் இயக்குனராக ஒருவரும் செயல்பட இருக்கின்றனர் என்றும் அம்மாற்றங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இவ்வாறு செயல்பட இருக்கும் இருவரும் நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் கீழ் செயல்படும் அலுவலகங்களின் தலைவர்களாகச் செயல்படுவார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2023, 12:56